Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2017 ஜனவரி 29 , பி.ப. 12:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
வர்த்தகர் நந்தன லொக்குவிதானவின் டயர் தொழிற்சாலை அமைக்க காணிப்பெற்றுக்கொடுப்பதை முதலீட்டுச் சபை இவ்வார ஆரம்பம் முதல் தற்காலிகமாக கைவிட்டுள்ளது.
வர்த்தகர் நந்தன லொக்குவிதான மற்றும் முதலீட்டுச் சபைக்கு இடையில் அது தொடர்பான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பின்னர், குறித்த இடத்தில் நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புக்கு அமைய, பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் 100 பேர், குறித்த இடத்துக்குச் அனுப்பப்பட்டுள்ளனர்.
எவ்வாறாயினும் இந்த நடவடிக்கை, ஜனாதிபதி, பிரதமர் அலுவலகம் ஊடாக குறித்த வர்த்தகர் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டுமென, பொருளாதார முகாமைத்துவ தொடர்பான அமைச்சரவை குழு அறிக்கையொன்றை அனுப்பியுள்ளது.
இந்த டயர் தொழிற்சாலைக்கு 100 ஏக்கர் நிலப்பரப்பை குத்தகைக்கு கொடுப்பதால் முதலீட்டுச் சபைக்கு நட்டம் ஏற்படுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.
அதனைத் தவிர, இந்த இடம்தொடர்பில் அதிக விலைமனுவை மற்றுமொரு நிறுவனம் கோரியுள்ள நிலையில், அதனைவிட குறைந்த தொகை்கு கேட்ட நந்தன லொக்குவிதானவுக்கு குறித்த இடம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
4 hours ago
8 hours ago
16 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago
16 Aug 2025