2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

டில்ருக்‌ஷியின் குரல்பதிவை வெளியிட்டார் நிஷங்க

Kamal   / 2019 செப்டெம்பர் 21 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

எவன் காட் நிறுவனம் மீது இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் தொடரப்பட்ட வழக்குகள் தொடர்பாக மேற்படி ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளரும் டில்ருக்‌ஷி டயஸ் உடன் மேற்கொண்ட அழைப்பேசி உரையாடலொன்றின் பதிவுகளை எவன் காட் நிறுவனத்தின் தலைவர் நிஷங்க சேனாதிபதி வெளியிட்டுள்ளார்.

சிங்கப்பூரிலிருந்து தனது முகநூல் பக்கத்தில் இந்த குரல் பதிவை அவர் இட்டுள்ளதுடன், இந்த குரல் பதிவில் எவன் காட் நிறுவனத்தின் வியாபாரச் செயற்பாடுகள் தற்போதைய அரசாங்கத்தால் திட்டமிட்டு முடக்கப்பட்டதெனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் வெளியிட்டுள்ள குரல் பதிவில் டில்ருக்‌ஷி டயஸ் உடையதென கூறப்படும் குரலில், எவன் காட் நிறுவனத்தின் சகல கடிதங்களை தான் படித்துள்ள நிலையில் அது தொடர்பாக முழுமையாக அறிந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

அதனை பற்றி தான் பெருமளவில் வருத்தமடைவதாகவும்,  இது கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தமையை இட்டு தான் கவலையடைவதாகவும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், முன்னாள் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் பணிப்பாளரும், தற்போதைய சொலிஸிட்டர் ஜெனராலுமான டில்ருக்‌ஷி டயஸ்ஸுக்கு எதிராக ராவணா பலய அமைப்பு கொழும்பு குற்ற விசாரணை பிரிவில் முறைபாடு செய்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .