Freelancer / 2026 ஏப்ரல் 02 , மு.ப. 08:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஈரான் - அமெரிக்க, இஸ்ரேல் போரால் மேற்காசியாவில் பதற்றம் தொடரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று இரவு பாதுகாப்புக்கான அமைச்சரவை கவுன்சில் (சி.சி.எஸ்) ஆலோசனை நடத்தியது. ஈரான் போரால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரானுக்கு எதிராக கடந்த பிப்ரவரி 28 ஆம் திகதி போரைத் தொடங்கின. இந்தப் போரில் ஈரான் நாட்டின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி உள்ளிட்ட பல்வேறு முக்கிய தலைவர்கள் உயிரிழந்தனர்.
இதையடுத்து, ஈரான் கடும் பதிலடியை கொடுக்கத் தொடங்கியது. வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவ தளங்கள் மீது ஈரான் கடும் தாக்குதலை நடத்தியது. கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க நிலைகளைக் குறிவைத்து ஈரான் தாக்குதல்களை நடத்துவதால் கச்சா எண்ணெய்யை மற்ற நாடுகளுக்கு அனுப்புவதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும், எண்ணெய் கப்பல்கள் செல்லும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முற்றிலும் முடக்கியுள்ளது. இதனால், சர்வதேச அளவில் எரிபொருள் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று இரவு 7 மணிக்கு டில்லியில் நடைபெற்றது.
டில்லியில் பிரதமரின் அதிகாரப்பூர்வ அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும், பொருளாதாரம் மற்றும் உள்கட்டமைப்புத் துறைகளைக் கையாளும் பல மூத்த அமைச்சர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். மேற்காசியாவில் தொடரும் போர், அதனால் இந்தியாவில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள், நாடு சந்தித்து வரும் பிரச்சினைகள், அதற்கான தீர்வுகள் உள்ளிட்டவை குறித்து இந்தக் கூட்டத்தில் அமைச்சர்களுடன் பிரதமர் மோடி விரிவான ஆலோசனை நடத்தினார். (a)

4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago