2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

‘ட்ரோன்’ விட்ட நால்வர் கைது

Editorial   / 2019 பெப்ரவரி 04 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு அருகில், சட்டவிரோதமான முறையில் ட்ரோனொன்றைப் பறக்கவிட்ட நால்வரைக் கைதுசெய்துள்ளதாக, பொலிஸார் நேற்று (03) தெரிவித்தனர்.

 கைதுசெய்யப்பட்ட நால்வரும், மாலைதீவுகளைச் சேர்ந்தவர்களென, அதிகாரிகள் தெரிவித்தனர். 

விமான நிலையத்தின் அதியுயர் பாதுகாப்பு வலயத்தில், நேற்று முன்தினம் இரவு, ட்ரோனொன்றைப் பயன்படுத்தி இவர்கள் படம்பிடித்துக் கொண்டிருந்ததைக் கண்ட போதே கைதுசெய்யப்ப ட்டனரென, பொலிஸார் தெரிவித்தனர். 

“ட்ரோனொன்றைப் பயன்படுத்தி, விமான நிலையப் பகுதியில் அவர்கள் படம்பிடித்துக் கொண்டிருந்தனர். விசாரணைகள் தொடர்கின்றனர்” எனத் தெரிவித்த பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர, கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள், 19 வயதுக்கும் 23 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனத் தெரிவித்தார்.

விமான நிலையத்துக்கு அருகில், ட்ரோனொன்றைச் சட்டவிரோதமாகப் பயன்படுத்தியமை தொடர்பாக, இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட முதலாவது கைது இதுவாகும்.  அண்மைய வாரங்களில், ட்ரோன்கள்காரணமாக இலண்டனிலும் நியூயோர்க்கிலும், விமானப் பறப்புகளுக்குப் பாதிப்புகள் ஏற்பட்டிருந்த போதிலும், இந்த ட்ரோன் செயற்பாடு காரணமாக, விமானப் பறப்புகளுக்குப் பாதிப்புகள் ஏற்படவில்லை என, அதிகாரிகள் தெரிவித்தனர்.  

மாலைதீவுகளின் ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சொலிஹ், இலங்கையின் தேசிய தினக் கொண்டாட்டங்களுக்காக இலங்கையை நேற்று வந்தடைந்த நிலையில், அதற்கு முன்னர் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .