2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

தீக்காயங்களுக்கு உள்ளான 4 வயது சிறுமி மரணம்

Kogilavani   / 2017 ஜனவரி 15 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட, கந்தகெட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த நிபுணி ஹன்சமாலி என்ற 4 வயது சிறுமி, சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்துள்ளார்.

தனது வீட்டிலுள்ள அடுப்புக்கு அருகிலிருந்து குளிர்காய்ந்துகொண்டிருந்தபோது, சிறுமியின் ஆடையில் தீப்பற்றியுள்ளது. அவர் உடல்முழுதும் தீக்காயங்களுக்குள்ள உள்ளான நிலையில்  கந்தகெட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பின்னர்அங்கிருந்து  மஹியங்கனை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதுடன் மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .