Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2017 பெப்ரவரி 11 , மு.ப. 06:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
கே.எல்.ரியுதாஜித், பைஷல் இஸ்மாயில்
1804 ஜுன் 7ஆம் திகதி பிரித்தானிய அரசால் தேசத்துரோகிகளாகப் பிரகடனம் செய்யப்பட்ட 190 பேரையும் நாட்டுக்காக போராடி தேசிய வீரர்கள் என வர்த்தமானி மூலம் அறிவிக்குமாறு, இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில், இவ் விடயம் தொடர்பில் ஆராய எதிர்வரும் திங்கட்கிழமை (13) விசேட கலந்துரையாடலொன்று கண்டியில் நடைபெறவுள்ளது.
நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மற்றும் ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக ஆகியோரது பங்குபற்றலுடன் கண்டி தலதா மாளிகையில் திங்கட்கிழமை காலை 9 மணிக்கு மேற்படி கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
இக்கலந்துரையாடலுக்கு புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எனினும், வேறு ஒரு வேலை நிமித்தம் காரணமாக தன்னால் இக்கலந்துரையாடலுக்கு சமுகமளிக்க முடியாது என அவர் ஏற்பாட்டுக்குழுவுக்கு அறிவித்துள்ளார்.
1818 ஆம் ஆண்டு பிரித்தானிய ஆட்சிக்கு எதிராக ஊவா- வெல்லஸ்ஸ பகுதியில் கிளர்ச்சி செய்த 19 பெரும்பான்மையினத் தலைவர்கள் நாட்டுக்காகப் போராடிய தேசிய வீரர்கள் என வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஜனாதிபதி பிரகடனம் செய்திருந்தார்.
இந்நிலையில் 1818ஆம் ஆண்டு தேசத்துரோகிகளாகப் பிரகடனம் செய்யப்பட்ட மேலும் பலர் தேசிய வீரர்களாக அறிவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்நிலையில, 1804 ஜுன் 7ஆம் திகதி தேசத்துரோகிகளாகப் பிரகடனம் செய்யப்பட்ட சிங்கள, தமிழ், முஸ்லிம் தலைவர்கள் 190 பேரையும் நாட்டுக்காகப் போராடிய தேசிய வீரர்கள் எனப் பிரகடனம் செய்யுமாறு, இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஆகியோருக்கு கடிதம் அனுப்பி வைத்திருந்தார்.
அதில் 1804 ஜுன் 7ஆம் திகதி வெளியான வர்த்தமானி அறிவித்தலையும் இணைத்து அனுப்பியிருந்தார்.
இதனால், 1804ஆம் ஆண்டு தேசத்துரோகிகளாகப் பிரகடனம் செய்யப்பட்டவர்களையும் தேசிய வீரர்களாக அறிவிக்க அரசு கவனம் செலுத்தியுள்ளது.
இதற்கமைய குறித்த விசேட கலந்துரையாடலின் போது இந்த விடயங்கள் தொடர்பாக ஆராயப்படவுள்ளன.ஷ
4 hours ago
5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
8 hours ago