Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2017 பெப்ரவரி 12 , பி.ப. 04:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஊவா மாகாண வீதி அபிவிருத்தி, வீடமைப்பு, நீர்வழங்கல், தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் செந்தில் தொண்டமானுக்குச் சொந்தமான காளை, சல்லிக்கட்டில் தங்கப்பதக்கம் வென்றுள்ளது என, இந்தியச் செய்தி தெரிவிக்கிறது. மதுரையில் நடந்த பிரபல அலங்காநல்லூர் போட்டியிலேயே தங்கப் பதக்கம் வென்றுள்ளது.
இதுதொடர்பில், நியூ இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு செந்தில் தொண்டமான் கருத்துத் தெரிவிக்கையில், “காளைகளை, எமது குடும்ப அங்கத்தினர் போல நாம் பார்க்கின்றோம். இவைகளுக்கு தனித்தனியான அறைகளும் நீச்சல் தடாகமும் உள்ளன. நீச்சல், காளைகளைப் பலமானவையாக்கும்” காளைகளுக்கு என பிரத்தியேகமான நீச்சல் தடாகம் அமைக்கப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.
ஓட்டப்பந்தயக் குதிரைகள் போலவே இந்தக் காளைகளைக் கொண்டு செல்ல விஷேட மூடிய வண்டிகள் பயன்படுத்தப்படும். குதிரைப் பந்தயம் போலவே, சல்லிக்கட்டு சர்வதேச அங்கிகாரம் பெற உதவுவதற்கு, தனது சல்லிக் கட்டு ஆதரவாளர்கள் பாடுபட்டதாக தொண்டமான் கூறினார்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்குபற்றியபோது, வெளிநாடுகள் பலவற்றில் சல்லிக்கட்டடைப் பற்றி நல்ல அபிப்பிராயத்தை உருவாக்கும் எனும் நம்பிக்கையைத் தான் கொண்டிருந்ததாகவும் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
“எனது முன்னோர் சிவகங்கை மாவட்டத்தில் திருப்புத்தூர் தாலுகாவைச் சேர்ந்தவர்கள். இவர்கள் பிரிட்டிஷ் ஆட்சியின் போது இலங்கைக்கு வந்தனர். ஆனால், இவர்கள் தமது பரம்பரையினர் போன்று காளைகளை வளர்த்தனர். தமது பாரம்பரிய வழக்கப்படி 10 வெவ்வேறு இனக் காளைகளை தொண்டமான் வளர்த்தார். இழு வண்டி செலவு கூடியதாக இருந்தாலும் அது அவரது காளைகள் மன அழுத்தமிலாமல் இருக்க உதவும் இதனால் அவை கூடுதலாகச் சாதிக்கும்.
மாருதி சுஸுக்கி அல்ரோ கார்களை வென்ற கண்ணபுரம் இனக்காளை பற்றி தொண்டமான் கூறுகையில் “ எனது காளையொன்று முதலாவதாக வந்தது இதுதான் முதல் தடவை அல்ல. ஏனைய விளையாட்டுக்கள் போலவே சல்லிக்கட்டிலும் நாம் வாண்மையைக் கொண்டுவர முயல்விக்கிறோம்” என்றார்.
பதினான்கு நாடுகளில் உள்ள சல்லிக்கட்டு ஆர்வலர்களை ஒன்றுபடுத்துவதற்கு அப்பால், சல்லிக்கட்டுக்கு பிரதானமாக சட்ட உதவி வழங்குவதில், தொண்டமான், சல்லிக்கட்டு மீட்பு கழக தமிழ்நாடு இணைப்பாளர் டி. இராஜேஸ், சல்லிக்கட்டு வீர விளையாட்டு பாதுகாப்பு நல சங்க தலைவர் கரு அம்பலத்தரசு ஆகியோருடன் பேசுமளவுக்கு உள்ளார் என்றும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 hours ago
5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
8 hours ago