2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

திலினவின் பிணை நிபந்தனையில் மாற்றம்

George   / 2016 ஒக்டோபர் 11 , மு.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் நீதவான் திலின கமகேவின் பிணை நிபந்தனைகளை தளர்த்த கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

அனுமதிப் பத்திரமின்றி சட்டவிரோதமாக யானை குட்டியொன்றை தன் வசம் வைத்திருந்தமை தொடர்பிலான குற்றச்சாட்டில் அவர் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

வாரத்தில் ஒருதடவை, குற்றப் புலனாய்வுப் பிரிவில் நேரில் சமூகமளித்து கையெழுத்திட வேண்டும் என திலினவுக்கு பிணை வழங்கிய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

எனினும், குறித்த பிணை நிபந்தனையை தளர்த்த வேண்டும் என திலின கமகே நீதிமன்றத்தில் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

அதனையடுத்து திலின கமகே, மாதம் ஒரு தடவை குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜரானால் போதும் என நிபந்தனையை தளர்த்தி கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மனிலால் வைத்தியதிலக்க, உத்தரவிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .