Editorial / 2019 ஜூலை 23 , பி.ப. 06:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் தகவல்கள் வழங்கிய நபரை கௌரவிக்கும் வகையில் , அவருக்கு பணப்பரிசில் வழங்க பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.
அவ்வாறு வழங்கப்பட்ட ஒரு தகவலுக்கமைய, ஏப்ரல் 26ஆம் திகதி சம்மாந்துறை பிரதேச வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, வெடிப்பொருள்களும் சம்மாந்துறை- நிந்தவூர் பிரதேச வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிப்பொருள்களை கண்டுபிடிக்கப்பட்டன.
ஏப்ரல் 21 ஆம் திகதி பயங்கரவாத தாக்குதல் நடத்திய குழுவினர் தொடர்பில் தகவல்கள் வழங்கிய நபர் பாராட்டப்படவில்லை என அண்மையில் ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டது.
குறித்த செய்தி தொடர்பில் பொலிஸ் தலைமையகம் கவனம் செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டள்ளது.
எனவே இந்த நபர் வழங்கிய தகவல்களுக்கமைய தலா 2.5 மில்லியன் ரூபாய் அடிப்படையில் 5 மில்லியன் ரூபாயை வழங்க பதில் பொலிஸ்மா அதிபர் அனுமதி வழங்கியுள்ளார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago