2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை

தகவல்களை பெற்றுக்கொள்ள விசேட தொலைபேசி இலக்கம்

J.A. George   / 2021 பெப்ரவரி 01 , பி.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

73 ஆவது சுதந்திர தின நிகழ்வுகளுக்கு அமைவாக சுதந்திர சதுக்கம், சுதந்திர மாவத்தை ஆகிய பகுதிகளில் விசேட வாகன திட்டம் தொடர்பிலான ஒத்திகை நடைபெறுவதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

கடந்த 30 ஆம் திகதி தொடக்கம் பெப்ரவரி 3 ஆம் திகதி வரையில் இடம்பெறும் இந்த சுதந்திர தின வைபவ ஒத்திகையின் காரணமாக காலை 6.00 மணி தொடக்கம் நண்பகல் 01.00 மணி வரையில் விசேட வாகன திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

இது தொடர்பில், 0112 433333 என்ற தொலைபேசி இலக்கத்தின் மூலம் பொலிஸ் வாகன போக்குவரத்து தலைமையகத்துடன் தொடர்பு கொண்டு தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .