2026 மார்ச் 21, சனிக்கிழமை

தடுப்பூசி அட்டைகளுடன் சிக்கிய அபிவிருத்தி அதிகாரி

R.Maheshwary   / 2021 செப்டெம்பர் 12 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

45 கொரோனா தடுப்பூசி அட்டைகளை  தம்வசம் வைத்திருந்த, காலி மாநகர சபையின் சமூக அபிவிருத்தி அதிகாரியொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர், நாவின்ன- உளுவிட்டிகே பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் அவர், ஜூலை மாதம் 28ஆம் திகதி காலி மாநகர சபையில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி தொடர்பான செயலமர்வில் கலந்துகொண்டவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தடுப்பூசி செயலமர்வின் பின்னர்  அட்டைகளை ஒப்படைக்க வேண்டும் என்றும், எனினும் சந்தேகநபர் அவற்றை ஒப்படைக்காமல் தம்வசம் வைத்திருந்தார் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X