Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 ஓகஸ்ட் 20 , மு.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஹேஸ்வரி விஜயனந்தன்
இன்று தடை நீக்கப்பட்டுள்ள புலம்பெயர் அமைப்புகள் தான் ஜெனிவாவில் இலங்கை இராணுவத்தினர் யுத்தக் குற்றச்சாட்டில் ஈடுபட்டதாக ஜெனிவாவில் பிரேரணையை நிறைவேற்றினர்.
அவர்கள் மீதான தடை நீக்கப்பட காரணம் என்னவென தெரியவில்லை என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் பேராசிரியர் பிரதீபா மஹாநாமஹேவா தெரிவித்தார்.
தேசிய பாதுகாப்பு, சட்டம் தொடர்பில் ஊடக அறிக்கையிடல் தொடர்பில் அரச தகவல் திணைக்களத்தில் நேற்று (19) இடம்பெற்ற செயலமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சுனாமியின் போது முப்படையினரும் பொலிஸாரும் சிறப்பாக செயற்பட்டனர். இந்த விடயத்தில் முப்படையினரின் மனிதாபிமான நடவடிக்கை குறித்து ஜெனீவாவில் பேசப்படவில்லை. கொரோனா தொற்றின் போதும் கொரோனா தனிமைப்படுத்தல் நிலையங்களில் இராணுவத்தினரின் சிறப்பாக செயற்பட்டனர். இது தொடர்பில் எமது நாட்டு ஊடகங்கள் எதனையும் பேசவில்லை. இவ்வாறு இருக்கும் போது ஜெனீவாவில் உள்ளவர்களுக்கு எமது நாட்டு படையினரின் மனிதாபிமான செயற்பாடுகள் குறித்து அறிந்துகொள்ள வாய்ப்பில்லை என்றார்.
இன்று இலங்கையில் ஆறு புலம்பெயர் அமைப்புகளின் தடைகள் நீக்கப்பட்டுள்ளன. குறித்த அமைப்புகள் மீதான தடை ஏன் நீக்கப்பட்டதென தெரியவில்லை என்றார். குறித்த அமைப்புகளில் ஒன்றின் உறுப்பினான பாதிரியாரும் நானும் ஜெனிவா அமர்வின் போது, யுத்தக் குற்றசாட்டுகள் குறித்து நேருக்கு நேர் விவாதித்துக்கொண்டோம்.
அவர்கள் தான் இலங்கை இராணுவத்தினர் யுத்தக் குற்றச்சாட்டில் ஈடுபட்டதாக ஜெனிவாவில் பிரேரணை நிறைவேற்றினர். எனவே இப்போது இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அரசாங்கம் ,இராணுவத்தினருக்கு எதிராக அவர்களால் முன்வைக்கப்படும் பிரசாரங்களை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த 6 அமைப்புகளில் உள்ளவர்கள் தான் 2009 மே 19ஆம் திகதி இராணுவத்தினர் மனிதாபிமானமற்ற யுத்தக் குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக வகுப்புகளில் மாணவர்களுக்கு கற்பிக்கின்றனர். இராணுவத்தில் பலர் யுத்த குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டார்கள் என தெரிவித்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு இராணுவத்தினரின் பெயர் பட்டியலை வெளிநாடுகளுக்கு வழங்கியதே இந்த அமைப்புகளின் உறுப்பினர்கள் தான் என்றார்.
1 hours ago
3 hours ago
15 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
15 Aug 2025