Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 ஓகஸ்ட் 22 , பி.ப. 03:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன மற்றும் அவரது மகன் ரவிந்து குணவர்தன ஆகியோரை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 5ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ், இன்று திங்கட்கிழமை(22) உத்தரவிட்டார்.
ஆபத்தான ஆயதங்களை விநியோகம் செய்தமை மற்றும் தம்வசம் வைத்திருந்த வழக்கிலேயே இவர்களுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மற்றுமொரு சந்தேகநபரான வாஸ் குணவர்தனவின் மனைவி ஷாமலி குணவர்தனவுக்கு எதிரான வழக்கை 2017ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 16ஆம் திகதி விசாரணை செய்வதாகவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
ஷாமலி குணவர்தன ஏற்கெனவே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, பம்பலப்பிட்டி வர்த்தகர் மொஹமட் ஷியாம் கொலை வழக்கில் வாஸ் குணவர்தனவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
29 minute ago
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
1 hours ago
4 hours ago