J.A. George / 2021 ஏப்ரல் 06 , மு.ப. 10:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு 234 தொகுதிகளில் 88,937 வாக்குப்பதிவு மையங்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு இரவு 7 மணி வரை நடைபெறுகிறது. சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திர கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில், சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, தமிழகத்தில் ஒன்பது மணி காலை நிலவரப்படி பதிவாகி உள்ள வாக்கு சதவீதத்தை தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை தமிழகத்தில் பதிவாகியுள்ள வாக்கு சதவீதத்தை தெரிவித்து வருகிறது. அதன்படி இன்று காலை 9 மணி நிலவரப்படி தமிழகத்தில் 13.80 சதவீத வாக்கு வாக்கு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதிகபட்சமாக திண்டுக்கல் மாவட்டத்தில் 20.23 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்று உள்ளது. குறைந்தபட்சமாக திருநெல்வேலி மாவட்டத்தில் 9.95 அதிக வாக்குகள் பதிவாகியுள்ளது.
சென்னையில் இன்று காலை 9 மணி வரை 10.58 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்று உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .