2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

தலவாக்கலை விபத்தில் யுவதி மரணம்: தாய் படுகாயம்

Editorial   / 2021 மார்ச் 23 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

தலவாக்கலை – சென்.கிளயார்  டெவோன் பகுதியில் லொறியொன்றும் ஓட்டோவும் மோதி விபத்துக்குள்ளானதில், கணேஷன் நித்யாவின் (வயது 25 என்ற யுவதி உயிரிழந்துள்ளார். அவரது தாயார் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்றுக்காலை 5.24க்கு இடம்பெற்றுள்ளது என திம்புள்ளை- பத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று காலை 5.20 மணியளவில் இடம்பெற்றதாக திம்புள்ளை−பத்தனை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.  

நுவரெலியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த சுகாதார அமைச்சுக்கு சொந்தமான லொறியொன்றும், கொழும்பிலிருந்து நானுஓயா நோக்கி பயணித்த ஓட்டோடுமே இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

ஓட்டோவில் பயணித்த யுவதி மரணமடைந்தார், அவரது தாயார் படுகாயமடைந்துள்ளார் எனினும், ஓட்டோ சாரதிக்கு எவ்விதமான ஆபத்துகளும் ஏற்படவில்லையென பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

ஓட்டோ சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலத்தால் இவ்விபத்து சம்பவித்துள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், அவரை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X