Janu / 2023 ஜூலை 27 , மு.ப. 11:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
தாயின் கணவரால் 13 வயது சிறுமி துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகிய சம்பவமொன்று கோப்பாய் பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பெண்ணொருவர் , இரண்டாம் தாரமாக திருமணம் செய்து தனது முதல் கணவரின் மூன்று பிள்ளைகளுடன் , இரண்டாவது கணவருடன் குடும்பம் நடாத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் தாயின் இரண்டாவது கணவர் , 13 வயதுடைய சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து , பொலிஸார் சிறுமியை மீட்டு வைத்திய பரிசோதனைக்காக வைத்திய சாலையில் அனுமதித்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
எம். றொசாந்த்
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago