2026 மே 04, திங்கட்கிழமை

திருப்பலிகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு

R.Maheshwary   / 2021 மார்ச் 30 , மு.ப. 01:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரண்டு வருடங்களுக்குப் பின்னர், கிறிஸ்தவர்களால் அனுஷ்டிக்கவும் கொண்டாடவும் தயாராகிவரும் பெரிய வெள்ளி, உயிர்த்த ஞாயிறு ஆகிய விசேட ஆராதனைகளின் போது விசேட பாதுகாப்பு வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தேவாலயங்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, இந்த விசேட பாதுகாப்பு நடவடிக்கையை முன்னெடுக்குமாறு, பொலிஸ் மா அதிபர் சந்தன விக்கிரமரத்னவால், உரிய பாதுகாப்புத் தரப்பினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர்கள் முதல் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் வரையில், இந்த விசேட பாதுகாப்பு நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டுமென்று, பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பில், ஒவ்வொரு பிரதேசங்களிலும் காணப்படும் தேவாலயங்களின் மதகுருமார்களுடன் கலந்துரையாடி, உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும், அவர் அறிவுறுத்தியுள்ளார்.

அந்த வகையில், பெரிய வியாழனான ஏப்ரல் 1ஆம் திகதி ஆராதனை முதல் ஏப்ரல் 4ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினம் வரையில், இந்தப் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென்றும், தவிர ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும், புலனாய்வுப் பிரிவினரும் பொலிஸாரும் இணைந்து, தேவாலயங்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டுமென்றும், பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .