Editorial / 2026 ஜனவரி 30 , மு.ப. 10:55 - 0 - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவில் நடைபெற்ற 41-வது உலகத் திருமதி அழகிப் போட்டியில் தாய்லாந்துப் போட்டியாளர் மகுடம் சூடியுள்ளார். இதில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திப் கலந்துகொண்ட சபீனா யூசுப் மூன்றாம் இடத்தை பெற்றுக்கொண்டார்.
இப்போட்டி இலங்கை நேரப்படி வௌ்ளிக்கிழமை (30) காலை நிறைவடைந்தது.
இதில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திப் கலந்துகொண்ட சபீனா யூசுப், இறுதிச் சுற்றின் முதல் மூன்று இடங்களுக்குள் தெரிவானதுடன், அவருக்கு மூன்றாம் இடம் கிடைத்தது.
இப்போட்டியில் உலகின் 60-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த அழகிகள் கலந்துகொண்டனர். போட்டியை நடத்திய நாடான அமெரிக்காவின் போட்டியாளர் இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .