2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

திலும் அமுனுகமவுக்கு புதிய பதவி

Freelancer   / 2022 செப்டெம்பர் 17 , பி.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, பதில் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அரசியலமைப்பின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதுடன், ஜனாதிபதி நாடு திரும்பும் வரை இந்த நியமனம் அமுலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் கீழ் இருந்த மூன்று நிறுவனங்கள் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக  ஜனாதிபதியின் கையொப்பத்துடன், நேற்றையதினம் (16) வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதியமைச்சின் கீழ் இருந்த முதலீட்டுச் சபை, ஏற்றுமதி அபிவிருத்திச் சபை மற்றும் துறைமுகநகர பொருளாதார ஆணைக்குழு ஆகியவை முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன என்று குறித்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .