2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

துறைமுக அமைச்சு மீண்டும் ரோஹிதவுக்கு?

R.Maheshwary   / 2022 செப்டெம்பர் 20 , பி.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இங்கிலாந்தில் இருந்து நாடு திரும்பிய பின்னர், முழு அமைச்சரவையும் நியமிக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவித்த அவர்,  முக்கிய அமைச்சர்கள் முன்னர் வகித்த அமைச்சுப் பதவிகளையே மீண்டும் பெற்றுக் கொள்வார்கள் எனத் தெரிவித்த அவர், துறைமுகங்கள் மற்றும் கப்பல் தறை அமைச்சுப் பதவியை தான் வெற்றிகரமாக முன்னெடுத்ததால், தனக்கும் அதே அமைச்சுப் பதவி கிடைக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .