2025 ஜூலை 26, சனிக்கிழமை

தெரியாமல் மோதிய மாணவி வன்புணர்வு

Freelancer   / 2022 ஒக்டோபர் 08 , பி.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்பாராத விதமாக மோதிய மாணவியை பாடசாலை கழிவறைக்கு இழுத்துச்சென்று மாணவர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் டெல்லியில் அரங்கேறியுள்ளது. 

டெல்லியில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பாடசாலையில் 11 வயது மாணவி இது குறித்து பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

அந்த மாணவி வகுப்பறைக்கு செல்லும்போது எதிர்பாராத விதமாக 2 சீனியர் மாணவர்கள் மீது தெரியாமல் மோதியுள்ளார். 

இதையடுத்து, 11 மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கும் அந்த 2 சீனியர் மாணவர்களிடம் அந்த மாணவி மன்னிப்புகேட்டுள்ளார். 

ஆனால், ஆத்திரமடைந்த அந்த இரு மாணவர்களும் மாணவியை கடுமையாக தாக்கியதுடன், மாணவியை பாடசாலை கழிவறைக்கு இழுத்து சென்று வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளனர்.

இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவி பாடசாலை ஆசிரியரிடம் முறைப்பாடு செய்த போது, மாணவர்கள், பாடசாலையில் இருந்து நீக்கப்பட்டுவிட்டதாக கூறி இந்த விவகாரத்தை  நிர்வாகம் மூடி மறைத்துள்ளது. 

வன்கொடுமைக்கு உள்ளான மாணவி தற்போது பொலிஸில் முறைப்பாடு அளித்துள்ளார். இந்த முறைப்பாடு தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில் இந்த விவகாரத்தை டெல்லி மகளிர் ஆணையம் கையில் எடுத்துள்ளது. 

பாடசாலை கழிவறையில் மாணவி, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை மறைத்தது ஏன்? இது தொடர்பாக ஏன் முறைப்பாடு அளிக்கவில்லை? என்பது குறித்து பாடசாலை நிர்வாகத்திடம் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய மாணவர்கள், சம்பவத்தை மறைத்த பாடசாலை ஆசிரியர்கள் மீது விசாரணை நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X