2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

தேசபந்துவை நீக்க பிரேரணை கையளிப்பு

Janu   / 2025 மார்ச் 25 , பி.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை அப்பதவியிலிருந்து நீக்குவதற்கான விசாரணைக் குழுவொன்றை நியமிப்பது தொடர்பான பிரேரணை முன்வைப்பதற்கான தீர்மானம்   பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவிடம் செவ்வாய்க்கிழமை (25) கையளிக்கப்பட்டது. இதில் 115 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.

2002ஆம் ஆண்டின் 05ஆம் இலக்க அலுவலர்களை அகற்றுதல் (நடவடிக்கைமுறை) சட்டத்தின் 5வது பிரிவுக்கு அமைய இந்தத் தீர்மானம்  சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களும்,   பிரதியமைச்சர்களுமான மஹிந்த ஜயசிங்க, எரங்க குணசேகர,  பாராளுமன்ற உறுப்பினர்களான (கலாநிதி) கௌசல்யா ஆரியரத்ன மற்றும் (சட்டத்தரணி) உபுல் அபேவிக்ரம ஆகியோர் இந்தப் பிரேரணையை   சபாநாயகரிடம் கையளித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X