2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

தேசிய மக்கள் இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளர் இன்று அறிவிப்பு

Editorial   / 2019 செப்டெம்பர் 29 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் இயக்கத்தின் சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர் இன்று (29) அறிவிக்கப்படவுள்ளார்.

பல்வேறு சிவில் சமூக அமைப்புகள் அங்கம் வகிக்கும் தேசிய மக்கள் இயக்கத்தின் மாநாடு இன்று பிற்பகல் 1.30 மணியளவில் கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெறவுள்ளது.

இந்த மாநாட்டிலேயே, தேசிய மக்கள் இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளார்.

தேசிய மக்கள் இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் மகேஸ் சேனநாயக்க பெயரிடப்படுவார் என்று உறுதிப்படுத்தப்படதாக தகவல் வெளியாகியுள்ளது.

எனினும், தமது வேட்பாளர் யார் என்பதை வெளியிட தேசிய மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் மறுப்புத் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .