2026 மே 04, திங்கட்கிழமை

’தேர்தல் செலவு தேசிய குற்றமாகும்’

R.Maheshwary   / 2021 மார்ச் 31 , மு.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு சுமார் 500 மில்லியன் ரூபாய் செலவாகுமென தெரிவித்தள்ள  பிக்குகள் முன்னணியின் தலைவர் பெங்கமுவே நாலக தேரர், அது தேசிய குற்றமாகும் என்றார்.

கொழும்பில், நேற்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், 'மாகாண சபை அமைப்பு இந்த நாட்டுக்குத் அவசியமான ஒன்றல்ல. அதன் அதிகாரத்தால்  பெறப்பட்டவை ஒன்றுமல்ல' என்றார்.

இதனால் நாட்டுக்கு எந்த நன்மையும் இல்லை எனத் தெரிவித்த அவர், மாகாண சபை தேர்தல் தோல்வியடைந்ததால் மக்கள்  எவரும் பாதிப்புக்கு உள்ளாகவில்லை எனவும் கூறினார்.

இதேவேளை, 'ஜனாதிபதியும் பிரதமரும் புதிய அரசியலமைப்பைக் கொண்டுவருவதாக உறுதியளித்துள்ளனர். அதன்போது மாகாண சபைகள் தொடர்பாக ஒரு முடிவை எடுக்க முடியும்.

'எனவே, மாகாண சபை தேர்தல் குறித்து பீதியடைய வேண்டாமென அரசாங்கத்திடம் நாங்கள் கூறுகிறோம்.

'மேலும்இ தற்போதைய சூழ்நிலையில் மாகாண சபை தேர்தலுக்காக சுமார் 500 மில்லியன் ரூபாய் செலவழிப்பது தேசிய குற்றமாகும்.

'அத்துடன், மாகாண சபைத் தேர்தலையை ஒத்திவைக்கக் கோரி, பிக்குகள் கையெழுத்திட்ட கடிதமொன்றும் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளது' என அவர் மேலும் கூறினார்.
....


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .