2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

தொங்கு பாலம் அறுத்து விழுந்ததில் 60 பேர் பலி

Freelancer   / 2022 ஒக்டோபர் 31 , மு.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் பாலமொன்று அறுந்து விழுந்ததில் குறைந்தது 60 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

சம்பவம் இடம்பெற்ற போது பாலத்தின் மேல் சுமார் 400 பேர் இருந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன

இந்த பாலம் அறுந்து விழுந்ததால் மோர்பி நகரில் உள்ள மச்சு ஆற்றில் நூற்றுக்கணக்கானோர் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகுதியளவு நீரில் மூழ்கிய தொங்கு பாலத்தில் மக்கள் தொங்கிக்கொண்டிருப்பது போன்ற காணொளிகளும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

 அத்துடன், மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X