2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

தொந்தரவு செய்வதை நிறுத்துங்கள்; சீனா எச்சரிக்கை

Nirosh   / 2022 ஓகஸ்ட் 08 , பி.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான வழமையான செயற்பாடுகளுக்கு தொந்தரவு செய்வதை இந்தியா நிறுத்த வேண்டும் என, சீனாவின் வெளிநாட்டு அமைச்சர் வாங் வென்பின் இந்தியாவுக்குக் கடுமையாக எச்சரித்துள்ளார். 

ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வர உள்ள சீனக் கப்பல் விவகாரத்தில், தேவையற்ற அழுத்தங்களை இலங்கைக்கு இந்தியா வழங்கி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளா்.

சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்புக்கள் இரு நாடுகளாலும் 
பொதுவான நோக்கங்களுக்காக சுயாதீனமாக தெரிவு செய்யப்பட்டவை. இரு நாடுகளுக்கு இடையிலான இந்த ஒத்துழைப்பு செயற்பாடுகள் மூன்றாந்தரப்பினரை இலக்காகக் கொண்டவை அல்ல எனவும் அவர் கூறியுள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X