2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

‘ தொழிற்சங்க நடவடிக்கைகள் கடுமையாக்கப்படும்'

Editorial   / 2019 பெப்ரவரி 04 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளருக்கு வழங்கப்பட்டுள்ள இடமாற்றத்தை இன்றைய தினத்துக்குள் இரத்துச் செய்யப்படாது விட்டால், நாளைத் தொடக்கம் தொழிற்சங்க நடவடிக்கைகள் அதிகமாக முன்னெடுக்கப்படுமென, சுங்க அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த இடமாற்றத்தை இரத்துச் செய்யக்கோரி, சுங்க திணைக்களத்தின் சில பிரிவுகளில் சட்டபடி வேலைசெய்யும் தொ​ழிற்சங்க நடவடிக்கை கடந்த 30ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதென, அச்சங்கத்தின் செயலாளர் துஷித அதிகாரம் தெரிவித்துள்ளார்.

எனினும் இறக்குமதி செய்யப்படும் கிழங்கு, வெங்காயம், ஆப்பிள், திராட்சை போன்ற பழுதடையும் பொருட்கள் எவ்வித தடையுமின்றி விடுவிக்கப்பட்டு வந்த நிலையில், இன்றைய தினம் தமது பிரச்சினைக்கு தீர்வின்றேல் நாளையிலிருந்து கிழங்கு, வெங்காயம், ஆப்பிள், திராட்சை போன்ற பழுதடையும்  பொருட்களையும் சுங்க திணைக்களத்திலிருந்து விடுவிக்கும் நடவடிக்கை முடக்கப்படுமென இவர் தெரிவித்துள்ளார்.

சுங்க திணைக்கள அதிகாரிகளின் தொழிற்சங்க நடவடிக்கையால் அரசாங்கம் அன்றாடம் 2 பில்லியன் ரூபாயை இழப்பதாகவும் இதுவரை அரசாங்கத்துக்கு 10 பில்லியனுக்கும் அதிகம் நட்டம் ஏற்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .