2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

நீதிபதி நியமனத்தில் நடைமுறை என்ன எனக் கேள்வி

Niroshini   / 2017 பெப்ரவரி 13 , மு.ப. 01:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டத்தரணி ராமநாதன் கண்ணன் என்பவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், மேல் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். அந்த நியமனத்தை வழங்குவதற்கு நீதித்துறைசார்ந்த நடைமுறைகள் பின்பற்றப்பட்டனவா என்பது தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டுமென, இலங்கை மனித உரிமை மையம் மற்றும் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் (கபே) நிறைவேற்று பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் கோரியுள்ளார்.பிரதம நீதியரசர், சட்டமா அதிபர், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் மற்றும் நீதிச்சேவை ஆணைக்குழுவின் தலைவர் ஆகியோரிடமே, தெளிவுபடுத்துமாறு கோரியுள்ளார்.   

இந்த விவகாரம் தொடர்பில் அவர் அனுப்பிவைத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,   
சட்டத்தரணி ராமநாதன் கண்ணன் என்பவரை, மேல் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்குமாறு, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் எழுத்துமூலமாகக் கோரியதாகவும் அதற்கே, சட்டமா அதிபரின் அனுமதி கிடைத்துள்ளதாகவும் கபே அமைப்பு மேற்கொண்ட ஆரம்பக்கட்ட அவதானிப்புகளிலிருந்து தெரியவந்துள்ளது.   

இந்த நியமனத்துக்கு நீதிச் சேவைகள் ஆணைக்குழுவும் இணக்கம் தெரிவித்துள்ளது. எனினும், இந்த நியமனத்துக்கு பிரதம நீதியரசரின் அனுமதி அல்லது பரிந்துரைகள் கட்டாயமாக தேவைப்படுகின்றது.   

அரசியலமைப்பின் 111(2) (அ) பிரிவின் பிரகாரம், மேல் நீதிமன்றத்துக்கு நீதிபதியொருவரை நியமிப்பதற்கு, சட்டமா அதிபரைக் கேட்டதன் பின்னர் நீதிச்சேவைகள் ஆணைக்குவினால் வழங்கப்படும் பரிந்துரைகள், ஜனாதியினால் பெற்றுக்கொள்ளப்படவேண்டும்.   

தன்னுடைய கண்காணிப்பின் கீழான நடைமுறைகளின் பிரகாரம் இவை செயற்படுத்தப்பட்டதா, என்பது தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X