2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

நான் நாடு திரும்புவேன்: சைட்டம் சீ.ஈ.ஓ

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 14 , மு.ப. 01:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஷ்யாவுக்கு விஜயம் செய்துள்ள சைட்டம் தூதுக்குழுவினருடன் பயணத்துள்ள தான், எதிர்வரும் 21ஆம் திகதியன்று நாடு திரும்பவுள்ளதாக மாலபேயிலுள்ள தொழில்நுட்ப மற்றும் மருத்துவத்துக்கான தெற்காசிய நிறுவகத்தின் (சைட்டம்) பிரதான நிறைவேற்று அதிகாரியான  டொக்டர் சமீர சேனாரத்ன தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  

“நான், நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக பிரதான ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரவலாக பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நிஸ்னி நொவொகொரொட் அரச வைத்திய கல்வியகத்தின் அழைப்பின் பேரில் ரஷ்யாவுக்கு விஜயம் செய்துள்ள சைட்டம் தூதுக்குழுவினருடன் நானும் பயணத்துள்ளேன். இந்த சைட்டம் தூதுக்குழுவில் அதன் பதிவாளர் மற்றும் இரு சைட்டம் பட்டதாரிகளையும் கொண்டுள்ளது. 

இந்த விஜயம் தொடர்பில் முறையான அறிவித்தல் முல்லேரியா பொலிஸ் பிரதம பொறுப்பதிகாரிக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், குறித்த பொலிஸ் நிலையத்தின் காவல் அதிகாரிகளின் உதவியுடன் நான் விமான நிலையத்துக்கு பயணித்திருந்தேன. என்னை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் நிலையில், அனைவரையும் சட்டம் மற்றும் ஒழுங்குக்கு மதிப்பளிக்குமாறு நான் கோரிக்கைவிடுக்கிறேன். இலங்கைக்கு பெப்ரவரி 21ஆம் திகதி திரும்பவுள்ளது. அன்று நானும், நாடு திரும்புவேன்” என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X