2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

நிபந்தனைகளுக்குக் கட்டுப்பாட்டிருந்தால் ‘மஹிந்தவுக்கு வாய்ப்பு’

Kogilavani   / 2017 ஜனவரி 17 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் இறையாண்மையைப் பாதிக்கும் வகையில், ஐரோப்பிய ஒன்றியத்தால் விதிக்கப்பட்ட நிபந்தனைகளை  தான் ஏற்றிருந்தால், ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு ஏற்பட்டிருக்குமென, ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.  

ஜி.எஸ்.பி பிளஸ் பற்றி அதிகமாகப் பேசும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்த முன்னுரிமை தீர்வைத் திட்டத்தை இலங்கைக்கு மீண்டும் வழங்குவதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தால் வழங்கப்பட்ட நிபந்தனைகள் பற்றிப் பேசுவதில்லை என்று, அவர் மேலும் குறிப்பிட்டார்.  

அவர், இது தொடர்பாக நேற்று மேலும் தெரிவிக்கையில்,   

“பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குதல் மற்றும் இராணுவ மறுசீரமைப்பு போன்ற, நாட்டின் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் மற்றும் நாட்டுக்குத் தீமைகளை ஏற்படுத்தும் 58 நிபந்தனைகளுக்கு, அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கைக்குச் சலுகைகள் கிடைக்கவேண்டும் என்பதற்கு, நாம் ஆதரவு வழங்கினாலும், தேசத்தை விற்பனைச் செய்வதற்கு நாம் எதிரானவர்களே. இதுபோன்ற சில நிபந்தனைகளை, முன்னாள் ஜனாபதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிராகரித்திருந்தார்.” என்று அவர் குறிப்பிட்டார்.   

ஜி.எஸ்.பி பிளஸ் சலுகைக் கிடைக்க வேண்டும் என்பது முக்கியத்துவம் இல்லை. ஆனால், அதனால் ஏற்படும் பின்விளைவுகளை நாம் கருத்தில் கொள்ளுதல் வேண்டும் என்றும் அவர் கூறினார்.   

“நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடைய வேண்டும் என்பதற்காக, எமது நாட்டை அடகு வைக்க முடியாது. இந்த நிபந்தனைகள் மூலம், நாடும் நாட்டு மக்களும் பாதிக்கப்படுவர் என்பதை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் நிராகரிக்க முடியாது” என்றும் அவர் தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .