2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

நாமலுக்கு பிணை

Gavitha   / 2016 ஓகஸ்ட் 22 , மு.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதியின் புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட இரண்டு பேரையும், கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதவான் இன்று திங்கட்கிழமை (22) பிணையில் விடுதலை செய்துள்ளார்.

நிதிக்குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு (குஊஐனு) கடந்த திங்கட்கிழமை (15), சமுகமளித்து வாக்குமூலமளித்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, அப்பிரிவின் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

தனியார் நிறுவனம் ஒன்றின் 125 மில்லியன் ரூபாய் பெறுமதியான பங்குகளைக் கொள்வனவு செய்தமை தொடர்பிலான விசாரணைகளுக்காகவே அவர், நிதிக்குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு சமுகமளித்திருந்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X