Princiya Dixci / 2017 ஏப்ரல் 10 , மு.ப. 09:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

நல்லிணக்கத்தைப் பலப்படுத்தி அனைத்து சமய தத்துவங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளவாறு மக்களின் மனங்களை இணைக்கும் பணியின் உண்மையான தூதுவர்களாக இருப்பவர்கள் ஆன்மீக தலைவர்களாவர் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
"திரிபிடகம், விவிலியம், அல்குர்ஆன், பகவத்கீதையில் நாம் எதிர்பார்க்கும் நல்லிணக்கத்துக்கு வழிகாட்டப்பட்டுள்ளது" எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, பௌத்த பிக்குகள், இந்து, இஸ்லாமிய மற்றும் கத்தோலிக்க சமயத் தலைவர்களுக்கு, இதனை சமூகத்தில் நடைமுறைப்படுத்தும் பொறுப்பு உள்ளது என்றும் தெரிவித்தார்.
தங்கொடுவை சிங்கக்குளியில் ஞாயிற்றுக்கிழமை (09) பிற்பகல் நடைபெற்ற 'எரபது வசந்தம்' தேசிய மற்றும் சமய நல்லிணக்கம் தொடர்பான கலாசார நிகழ்வு மற்றும் கலாசூரி மர்சலின் ஜயகொடி திருத்தந்தைக்கு கௌரவமளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
அனைத்து இனங்களுக்கு மத்தியிலான சமாதானம் மற்றும் நல்லிணக்கத்திலேயே, வரலாற்று காலம்தொட்டு எமது நாடு கட்டியெழுப்பப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அனைத்து மக்கள் மத்தியிலும் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் உறுதிப்படுத்தி, பலமான மக்கள் சமூகமாக நாம் முன்னேறிச்செல்ல வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
சமயத் தலைவரும் கலைஞருமான திருத்தந்தை மர்சலின் ஜயகொடியின் சேவைகளை ஜனாதிபதி பாராட்டினார். அவரது சேவைகளைப் பாராட்டி, அவரது குடும்பத்தின் சிரேஷ்ட உறுப்பினரான மினிப்ரிடா ஜயகொடிக்கு, நினைவுச் சின்னத்தையும் ஜனாதிபதி வழங்கிவைத்தார்.
2 hours ago
2 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
7 hours ago