Editorial / 2019 ஜூலை 21 , பி.ப. 03:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
24 மணித்தியால சுகயீன விடுமுறை போராட்டத்தில் இன்று (21) நள்ளிரவு முதல் ஈடுபட ஒன்றிணைந்த தபால் சேவைகள் தொழிற்சங்கம் தீர்மானித்துள்ளது.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று நள்ளிரவு 12 மணி முதல் நாளை நள்ளிரவு 12 மணி வரையில் அனைத்து தபால் ஊழியர்களும் சுகயீன விடுமுறையை அறிவிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதனை, ஒன்றிணைந்த தபால் சேவைகள் தொழிற்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சித்தக பண்டார தெரிவித்துள்ளார்.
முன்னதாக கடந்த வாரம் முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு, தபால் சேவைகள் அமைச்சுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் நிறைவுக்கு வந்தது.
எனினும், தமக்கு வழங்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்படாத நிலையில் மீண்டும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட ஒன்றிணைந்த தபால் சேவைகள் தொழிற்சங்கம் தீர்மானித்துள்ளது.
9 minute ago
25 minute ago
40 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
25 minute ago
40 minute ago
1 hours ago