2025 ஜூலை 09, புதன்கிழமை

’நாங்கள் வெற்றி கண்டுள்ளோம்’

Editorial   / 2018 நவம்பர் 13 , பி.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனநாயகத்துக்கும் நீதிக்குமான போராட்டத்தில், வெற்றி கண்டுள்ளதாகவும்  இலங்கையின் நீதித்துறை, இன்னும் உயிர் வாழ்வதை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு பலமாக உணர்த்தியுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தைக் கலைத்தமைக்கு எதிராக, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 13 அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பான விசாரணைகளின் தீர்ப்பாக, உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்தது.

இது தொடர்பில் கருத்துரைத்துள்ள அவர், “நீதித்துறைக்கு நாங்கள் தலைசாய்ப்பதோடு, ஜனநாயகப் போராட்டத்தில் எம்முடன் உழைத்த அனைத்துத் தரப்பினருக்கும் நன்றிகளைத் தெரிவிப்பதுடன், ஜனநாயகம் வெற்றிபெற வேண்டுமென எமது கோரிக்கையை ஏற்று பிரார்த்தனை செய்த அனைவருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .