2025 ஜூலை 09, புதன்கிழமை

‘நாடாளுமன்றத்தை சுத்தம் செய்ய வேண்டும்’

Editorial   / 2020 பெப்ரவரி 26 , பி.ப. 01:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜூட் சமந்த

தற்போதைய நாடாளுமன்றத்தை சுத்தம் செய்ய வேண்டிய காலம் தற்போது உதயமாகியுள்ளதாகத் தெரிவித்த தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க, உண்மையைக் கூறும் தரப்பினர் தேவைப்படுமாயின், அவர்கள் தமது அணியிலேயே உள்ளனர் என்றார்.

சிலாபத்தில், நேற்று (25) நடைபெற்ற மக்கள் சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்துரைத்த அவர், காலத்துக்குக் காலம் அரசாங்கம் மாறுகிறது. அரசாங்கம் மாறுகின்றபோது, சகல வேலைத்திட்டங்களும் மாறும் என்றே, மக்கள் நினைக்கின்றனர். ஆனால், பழைய முகங்களே மீண்டும் அதே இடத்துக்கு வருகின்றனர். அவர்கள் பழைய  தாளத்துக்கு ஏற்றவாறே, மீண்டும் செயற்படுகின்றனர் எனத் தெரிவித்த அவர், மக்கள் பாரிய எதிர்பார்ப்புடன்  அரசாங்கத்தை அமைத்தாலும், மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுவதில்லை என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .