Freelancer / 2026 பெப்ரவரி 12 , மு.ப. 08:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த சில நாள்களாக நிலவி வந்த வரண்ட வானிலை நிலையில் மாற்றம் ஏற்பட்டு, இன்று (12) முதல் நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று (12) மத்திய, ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நுவரெலியா, மாத்தளை, பதுளை மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களின் சில இடங்களில் 50 மில்லி மீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.
வட மாகாணத்தில் சில தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை 2 மணிக்கு பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. (a)
7 hours ago
05 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
05 Mar 2026