2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

நாமலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டது

R.Maheshwary   / 2022 செப்டெம்பர் 21 , பி.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிரிஷ் நிறுவனத்திடமிருந்து 70 மில்லியன் ரூபாவைப் பெற்று, முறைகேடாகப் பயன்படுத்தியதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு, இன்று (21) கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

இதன்போது வழக்கின் பிரதிவாதியான நாமல் ராஜபக்ஸவும் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார்.


இந்த சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையை கோரியுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் இன்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

அதன்படி  இந்த வழக்கை அடுத்த வருடம் பெப்ரவரி முதலாம் திகதி, மீண்டும் விசாரணைக்கு எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.


ரக்பி விளையாட்டை மேம்படுத்துவதாகத் தெரிவித்து, கிரிஷ் எனப்படும் நிறுவனத்திடமிருந்து 70 மில்லியன் ரூபாவைப் பெற்று, அதனை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில், கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது, நாமல் ராஜபக்ஸவுக்கு எதிராக நீதிமன்றில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X