2025 செப்டெம்பர் 13, சனிக்கிழமை

நாலக, நாமல் இன்று நீதிமன்றில் முன்னிலை

Editorial   / 2018 ஒக்டோபர் 08 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ ஆகியோரைக் கொலை செய்வதற்கு, சதித்திட்டம் தீட்டிய சம்பவம் தொடர்பில் தகவல்களை வெளிப்படுத்திய ஊழல் ஒழிப்பு பிரிவின் நடவடிக்கை பணிப்பாளர் நாமல் குமாரவும் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக த சில்வாவும் இன்று நீதிமன்றில் முன்னிலையாகவுள்ளனர்.

கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன வழங்கிய உத்தரவுக்கமையவே இவர்களிருவரும் இன்று நீதிமன்றில் முன்னிலையாகவுள்ளனர்.

இதற்கு முன்னர் குற்றப்புலனாய்வு திணைக்களம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் என்பவற்றில் நாமல் குமார முன்வைத்த காரணங்கள் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டதற்கு அமையவே, நாமல் குமார மற்றும் நாலக சில்வா ஆகிய இருவரையும் இன்று நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

 இதேவேளை நாமல் குமார மற்றும் நாலக த சில்வாவின் குரல் பதிவுகள் தொடர்பான அறிக்கை நாளை அல்லது நாளை மறுதினம் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படுமென அரச இரசாயண பகுப்பாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .