2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

நாளைய போராட்டங்களில் தமது பங்களிப்பு இருக்காது

R.Maheshwary   / 2022 ஓகஸ்ட் 08 , பி.ப. 07:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாளைய தினம் நடைபெறவுள்ள போராட்டங்களில் எங்களது பங்களிப்பு இருக்காது. நாளைய தினம் நாட்டில் எந்தவித தொழிற்சங்க  அல்லது தேசிய போரட்டமோ நடைபெறாது என தம்ம சுஜாத தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இந்த நேரத்தில் மக்கள், மதத் தலைவர்கள், சிவில் அமைப்புகள் வேண்டுவது பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சிகளும் ஒன்றிணைந்து ஒன்றிணைந்த  வேலைத்திட்டத்துக்கு செல்லுமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.

இதற்காக பெரும்பாலானோர்  இணைந்துள்ளதுடன், விரிவான கலந்துரையாடல்கள் நாட்டில் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான நேரத்தில் மேலும் போராட்டங்களில் ஈடுபடுவதால் எந்த பலனும் இல்லை.

இன்று இந்த நாட்டின் தேவைப்பாடுகளை புரிந்துகொள்ள முடியாத அரசியல் பைத்தியங்களின் பின்னால் சென்று யாராவது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானால் அவ்வாறு இலக்கானவர் வீரர் இல்லை. கோழை என்றே கூறுவோம் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X