2025 ஜூலை 30, புதன்கிழமை

நிர்வாணமாக இறந்து கிடந்த கணவருடன் 2 நாட்கள் வாழ்ந்த மனைவி

Editorial   / 2022 மே 26 , பி.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


நிர்வாணமாக இறந்து கிடந்த கணவருடன் 2 நாட்கள் வாழ்ந்த மனைவியால் சென்னை புரசைவாக்கத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுதொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களை அடுத்து, பூட்டிய வீட்டுக்குள் அழுகிய நிலையில் இருந்த கட்டிட தொழிலாளி உடலை பொலிஸார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவரது மனைவிக்கு  கடந்த சில ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.  எனினும், தங்களுடைய தந்தையுடன், பிள்ளைகள் ஒவ்வொரு நாளும் ​அலைபேசியில் பேசி வந்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக, அவர், பேசவில்லை. இதனால், சந்தேகமடைந்த பிள்கைள், தந்தையின் வீட்டுக்குச் சென்று பார்த்துள்ளனர். கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டுள்ளது. தட்டியுள்ளனர். திறக்கவில்லை. எனினும், துர்நாற்றம் வீதியுள்ளது.

பொலிஸார் கதவை உடைத்து பார்த்தபோது, உடலில் துணிகள் இல்லாமல் நிர்வாணமாக   கணவன் இறந்து கிடந்துள்ளார்.  அவரது அருகில் மனநிலை பாதிக்கப்பட்ட மனைவி பத்மினி அமர்ந்து அவரையே பார்த்துக் கொண்டிருந்ததும் தெரியவந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .