Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Editorial / 2020 பெப்ரவரி 24 , பி.ப. 03:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.இஸட்.ஷாஜஹான்
நீர்கொழும்பு களப்பு அபிவிருத்தி வேலைத்திட்டத்துக்காக, பிட்டிபனை-தலாதூவ பிரதேசத்தில், குடா கங்கையில், மணல் அகழப்பட்டு, வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு விற்பனைச் செய்யப்படுவதாகத் தெரிவித்து, குடா கங்கையை சூழவுள்ள மீனவர்கள், இன்று (24) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பிட்டிப்பனை வீதியில், குடா கங்கை பிரதேசத்தில் இவர்கள் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பிட்டிபனை ஐக்கிய மீனவர் சங்கம், கம்மல்தொட்ட மீனவர் சங்கம், பலகத்துறை சாந்த ஆனா மீனவர் சங்கம், கம்மல்தொட்ட சாந்த பீற்றர் மீனவர் சங்கம், ஏத்துக்கால நிர்மலமாதா மீனவர் சங்கம், பலகத்துறை வத்முல்ல மீனவர் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றியிருந்தனர்.
ஆரப்பாட்டம் ஆரம்பமானவுடன், நீர்கொழும்பு மாவட்ட மீனவர் அலுவலகத்தின் உதவி அத்தியட்சகர் ரஞ்சித் பண்டார, நீர்கொழும்பு களப்பு அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் மேற்பார்வை அதிகாரி பி.ஏ. மதுரங்க, பொலிஸ் அதிகாரிகள் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வருகைதந்து, மீனவர் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதன்போது, இருதரப்பினருக்கும் இடையில் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
5 hours ago