2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

நோர்வூட் பிரதேசசபைக்குப் பூட்டு

Nirosh   / 2021 மார்ச் 17 , பி.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 (எஸ்.சதீஸ்)

நோர்வூட் பிரதேசசபையின் மேலும் மூன்று  உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்தையடுத்து 10 நாட்களுக்கு பிரதேசசபை நடவடிக்கை முடக்கப்பட்டுள்ளது

நோர்வூட் பிரதேசசபையின் உபதவிசாளரின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து அவரோடு தொடர்பை பேணியவர்களுக்கு மேற்கொள்ளப்பட்டப் பிசிஆர்  பரிசோதனையில் உபதவிசாளர், அவரது தாயார், மற்றும் உபதவிசாளரின் வியாபார ஸ்தாபனத்தில் வேலை செய்யும் பெண் ஒருவர் என மூவருக்கு கடந்த 11 ஆம் திகதி  கொரோனா இருப்பது உறுதியானது. 

இதனால், நோர்வூட் பிரதேசசபை உறுப்பினர்களுக்கு பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. 

இதில் அப்பிரதேசசபையின் மூன்று உறுப்பினர்களுக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டதால், பிரதேசசபை நடவடிக்கைகள் தற்காலிகமாக 10 நாள்களுக்கு முடக்கப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X