2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

George   / 2017 ஜனவரி 12 , மு.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜெகநாதன்,வா.கிருஸ்ணா

தைப் பொங்கலை முன்னிட்டு வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய ஆகிய மாகாணங்களில் உள்ள தமிழ்மொழி மூலமான பாடசாலைகள் அனைத்துக்கும், நாளை 13ஆம் திகதியன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

இந்த விடுமுறைக்குப் பதிலாக, எதிர்வரும் 21ஆம் திகதி சனிக்கிழமையன்று பாடசாலை திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.   

இன்று 12 ஆம் திகதி பௌர்ணமி விடுமுறை தினம் என்பதனாலும், எதிர்வரும் 14ஆம் திகதி தைப்பொங்கல் தினம் என்பதை கவனத்தில் கொண்டும் 13ஆம் திகதி, பாடசாலை விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, கிழக்கு மாகாணத்தை பொறுத்தவரையில், மாகாணசபைக்குட்பட்ட பாடசாலைகளுக்கே விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாகவும் தேசிய பாடசாலைகள் தொடர்பில் மத்திய கல்வி அமைச்சே தீர்மானிக்கமுடியும் என கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி தெரிவித்தார்.  

மாகாணசபைக்குட்பட்ட பாடசாலைகளுக்கே விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாகவும் தேசிய பாடசாலைகள் தொடர்பில் மத்திய கல்வி அமைச்சே தீர்மானிக்கமுடியும் எனவும் அவர் தெரிவித்தார்.  

இதேவேளை, மத்திய மாகாணத்தில் தமிழ்மொழி மூலமான பாடசாலைகளுக்கு நாளை (13) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண கல்வித்திணைக்களம் அறிவித்துள்ளது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .