2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

போதையில் பறந்தவருக்கு 3 மாதங்கள் சிறை

George   / 2016 ஓகஸ்ட் 23 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

மது அருந்திவிட்டு வாகனம் செலுத்திய தனியார் பஸ் சாரதிக்கு மூன்று மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

புறக்கோட்டையில் இருந்து ஹோமாகம நோக்கி பயணிக்கும் 138 வழித்தட இலக்கம் கொண்ட பஸ், லிப்டன் சுற்றுவட்டப் பகுதியில் ஏனைய வாகனங்களுக்கு இடையூறு விளைவிக்கும் விதத்தில் இன்று காலையில் பயணித்துள்ளது.

இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, குறித்த பஸ் சாரதியை கறுவாத்தோட்ட பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இதன்போது, சாரதி மது போதையில் இருந்தமை தெரியவந்ததையடுத்து, புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.

அங்கொடை பகுதியைச் சேர்ந்த (வயது 46) சந்தேகநபரான பஸ் சாரதிக்கு மூன்று மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதுடன் 7,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சாரதியின், சாரதி அனுமதிப் பத்திரம் ஆறு மாதங்களுக்கு இரத்துச் செய்யப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X