Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2017 ஜனவரி 30 , மு.ப. 10:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் 69ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கொழும்பில் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இந்நிலையில், சுதந்திர தினமான பெப்ரவரி 4ஆம் திகதியன்று காலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரை, காலிமுகத்திடல் சுற்றுவட்டத்துக்கான காலி வீதி மற்றும் பழைய நாடாளுமன்ற கட்டடத் தொகுதிக்கான வீதி என்பன, முழுமையாக மூடப்படுமென, பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இதற்கமைய, காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரை, கொள்ளுப்பிட்டி சந்தியிலிருந்து காலிமுகத்திடல் சுற்றுவட்டம் வரையிலான பகுதி, புனித மைக்கல் சுற்றுவட்டத்தின் காலி வீதிப் பகுதி, ரொட்டுன்டா மாவத்தையின் காலி வீதிக்கான பகுதி, செரமிங் சந்தியிலிருந்து பழைய நாடாளுமன்றத்துக்கான பகுதி ஆகியன மூடப்படவுள்ளன.
இந்த வீதியோரங்களில் குடியிருப்போருக்கு மட்டும், இந்த வீதிகளில் பயணிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, யோர்க் வீதியிலிருந்து இலங்கை வங்கி மாவத்தை வரையான பகுதி, சீனோர் சந்தியிலிருந்து செரமிங் சந்தி வரையான பகுதி, பாக்கீர் மாக்கார் மாவத்தை, உத்தரானந்த மாவத்தை சந்தியிலிருந்து காலி முகத்திடல் சுற்றுவட்டம் வரையிலான பகுதிகளுக்கு, அந்த வீதிகளில் உள்ள நிறுவனங்களில் கடமையாற்றும் ஊழியர்கள் மாத்திரம் பயணிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
காலை 8 மணியிலிருந்து நண்பகல் 12 மணி வரை, காமினி சுற்றுவட்டத்திலிருந்து டீ.ஆர்.விஜயவர்த்தன மாவத்தையிலுள்ள பகுதிகளுக்கு, அலுவலக பணிகள் நிமித்தம் பயணிக்கும் ஊழியர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொம்பனித்தெரு பொலிஸ் சுற்று வட்டத்திலிருந்து ரீகல் திரையரங்கு சந்தி வரையான வீதியும் அன்றைய தினம் மூடப்பட்டிருக்கும்.
காலி வீதியின் ஊடாக கொழும்பை வந்தடையும் அல்லது கொழும்பிலிருந்து வெளியேறும் வாகனங்கள், டபிள்யூ.டீ.சில்வா மாவத்தை ஊடாக ஜயா மாவத்தை வரை உள்ள திம்பிரிகஸ்யாய வீதி மற்றும் பேஸ்லைன் வீதிகளைப் பயன்படுத்த முடியும்.
காலி வீதி ஊடாக கொழும்பை வந்தடையும் அல்லது கொழும்பை விட்டு வெளியேறும் இலகு வாகனங்கள், காலி வீதியின் ஊடான பகத்தலே வீதி, ஆர்.ஏ.டீ.மெல் மாவத்தை, தும்முல்ல சந்தி, கிளாஸ் ஹவுஸ் சந்தி, நந்தா மோட்டர்ஸ், ஹோட்டன் சுற்றுவட்டம், சொய்சா சுற்றுவட்டம், டீன்ஸ் வீதி மற்றும் டெக்னிக்கல் சந்தி ஊடாகப் பயணிக்கலாம்.
காலை 9 மணி முதல், கொள்ளுப்பிட்டி சந்தியிலிருந்து பித்தளைச் சந்தி மற்றும் கொம்பனித்தெரு ஊடாகப் பயணிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
4 hours ago
8 hours ago
16 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago
16 Aug 2025