2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

புறா திருடியவர்கள் கைது

Gavitha   / 2017 ஜனவரி 28 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம், காரைதீவுப் பகுதியில், 288,000 பெறுமதியான 38 புறாக்களை திருடிய மீனவர் ஒருவரை, வனாத்தவில்லு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பாடசாலை ஆசிரியர் ஒருவரால், கூடொன்றில் அடைக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வந்த புறாக்களை, 22 வயதுடைய மீனவர் திருடியதாக, ஆசிரியரினால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம், சந்தேக நபரைக் கைது செய்துள்ள பொலிஸார், அவரிடமிருந்து சில புறாக்களை மாத்திரம் மீட்டுள்ளனர். மிகுதி புறாக்களை விற்பனை செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .