2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

புலி பூச்சாண்டி எதற்காக: எழுக தமிழில் சி.வி.ஆவேசம்

Kogilavani   / 2017 பெப்ரவரி 10 , மு.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

'விடுதலைப்புலிகளை முற்றாக அழித்துவிட்டதாக அரசாங்கம் அறிவித்த பின், புலிகள் திரும்பவும் வந்துவிட்டார்கள் அல்லது வரப் போகின்றார்கள் என்று, பூச்சாண்டி காட்டுவது என்ன காரணத்துக்;காக' என்று, தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவரும் வடக்கு மாகாண முதலமைச்சருமான சி.வி.விக்ணேஸ்வரன் கேள்வியெழுப்பியுள்ளார்.

மட்டக்களப்பு நாவற்குடா விவேகானந்தா விளையாட்டுக்கழகத் திடலில் தற்போது நடைபெற்றுவரும் எழுக தமிழ் பேரணி கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்துரைத்த அவர் மேலும் கூறுகையில்,  

 'எழுமின், விழிமின், இலட்சியத்தை அடையும் வரை நிறுத்தாதீர்கள்!' என்றார் சுவாமி விவேகாநந்தர். கடோபநிஷதத்தில் வரும் சொற்களை உலகறியச் செய்தார் சுவாமி விவேகானந்தர். இன்று மட்டக்களப்பு விவேகானந்தா விளையாட்டுக் கழகத் திடலில் பெரும் எண்ணிக்கையில் திரண்டிருக்கும் எமது மக்களுக்கு, நான் கூறுவதும் அதுவே. 'எழுமின்! விழிமின்! இலட்சியங்களை அடையும் வரை நிறுத்தாதீர்கள்

'எமது பாதை, கரடு முரடாக அமையப் போகின்றது. அதற்கு நாங்கள் எங்களைத் தயார் படுத்த வேண்டியிருக்கின்றது. 69 வருடங்களுக்கும் மேலாக நாங்கள் எங்கள் குறைகளைக் கூறிக் கொண்டு வருகின்றோம். ஆனால் செவிடன் காதில் மகுடி இசைத்த கதையாகவே இருந்து வருகின்றது. உறங்குபவனை எழுப்பலாம். உறங்குவது போல் பாசாங்கு செய்பவனை எழுப்புவது மிகச் சிரமம். ஒரு வேளை, பச்சைத் தண்ணீர் கொண்டு முகத்தில் தெளித்தால் அவன் எழும்பக் கூடும். உறங்குபவர்கள் போலக் காண்பவரை உசுப்பி எழுப்பவே இந்த எழுக தமிழ் நடைபெறுகின்றது. மக்களின் மனோ நிலையையே நாங்கள் பிரதிபலிக்கின்றோம்.

'எங்கள் நடவடிக்கைகள் பிழையென்றும் நாட்டில் இருக்கும் நற்சூழலை நாங்கள் குழப்புகின்றோம் என்றும் எங்கள் மீது குற்றம் சாட்டப்படுகின்றது. நாங்கள் வாய்பேசா மடந்தைகளாக இருந்தால் அல்லது பெரும்பான்மையின அரசியல்வாதிகளுடன் ஒத்தூதினால் எங்களுக்கு நற்சாட்சிப் பத்திரம் கிடைக்கும். துணிந்து எமது குறைகளைக் கூறினால், அது ஒற்றுமையைச் சீர்குலைக்கும் செயல் எனப்படும். ஆகமொத்தம் எமக்கெது தேவை என்பதிலும் பார்க்க தாம் தருவதை நாங்கள் ஏற்க வேண்டும் என்பதிலேயே, குறியாக இருக்கின்றார்கள் பெரும்பான்மை இன அரசியல்வாதிகள்.  இன்னும் சில காலம் போனால் எங்களைப் பயங்கரவாதிகள் என்பார்கள் என்று நினைக்கின்றேன்.  

பயங்கரவாதத் தடைச் சட்டம் இன்னும் அமுலில் இருந்து வருகின்றது. அதன் ஓரம்சம் பற்றி நான் தெளிவு படுத்துவது நன்மை பயக்கும் என்று நம்புகின்றேன். ஒருவரை இன்னொருவர் கொல்கின்றார் அல்லது அடித்துத் துன்புறுத்துகின்றார் என்று வைத்துக் கொள்வோம். அச்செயல் எங்கள் குற்றவியல் சட்டத்தின் கீழ் குற்றமாகக் கணிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழும் குற்றமாகக் கணிக்கப்பட்டுள்ளது. அந்தக் குற்றச் செயலை இனங்கண்டு குற்றவியல் வழக்கா பயங்கரவாதத் தடைச்சட்ட வழக்கா பதிய வேண்டும் என்று நிர்ணயிப்பதற்கு அடிப்படை வரையறுத்தல்கள் எவையும் சட்டத்தில் கூறப்படவில்லை. இதனைத் தீர்மானிப்பது அரசே அல்லது அரச அதிகாரிகளே அல்லது இராணுவத்தினரே அல்லது பொலிஸாரே. இங்குதான் எம்மக்கள் பயங்கரவாதிகள் என்று முத்திரை ஒட்டப்படுகின்றார்கள். அரசு நினைத்தால் ஒருவர் பயங்கரவாதி, இல்லையேல் அவர் சாதாரணக


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X