2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் இராஜினாமா

Kanagaraj   / 2017 ஜனவரி 06 , மு.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் ஸ்ரீ ஹெட்டிகே, தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.

நீண்ட நாட்களுக்கு வெளிநாட்டில் தங்கியிருக்க வேண்டியிருப்பதன் காரணத்தால், அந்தப் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக அறியமுடிகின்றது.

தன்னுடைய இராஜினாமா கடிதத்தை அரசியலமைப்பு பேரவைக்கு அவர் அனுப்பிவைத்துள்ளார் என்றும் அறியமுடிகின்றது.
தலைவர் பதவியை இராஜினாமா செய்தாலும், ஆணைக்குழுவின் உறுப்பினராக தான் தொடர்ந்து செயற்படுவதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் என்றும் அறியமுடிகின்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .