George / 2017 ஏப்ரல் 10 , மு.ப. 11:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
தன் மீதும் தாயின் மீதும் பொலிஸ் அதிகாரிகள் சிலர் தாக்குதல் நடத்தியமைக்கு எதிராக, மாதம்மை பிரதேசத்தைச் சேர்ந்த பெண், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
பொலிஸ் அதிகாரிகள் குழுவால் தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்த நிலையில் மாரவில வைத்தியசாலையில் தானும் தாயும் தொடர்ந்து சிகிச்சைப்பெற்று வருவதாக அந்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
கடந்த 8ஆம் திகதி முற்பகல், சிலாபம் பொலிஸ் நிலைய அதிகாரிகள் சிலர், தமது வீட்டுக்கு வந்து, வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த லொறியை, பொலிஸாரின் பொறுப்பில் எடுப்பதற்கு முயற்சித்ததாக அந்தப் பெண் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
லொறியின் உரிமையாளரை கைதுசெய்ய பொலிஸார் முயற்சித்த போது, அதற்கு வீட்டிலுள்ளவர்கள் எதிர்ப்பு வெளியிட்டதையடுத்து, இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக அந்தப் பெண் மேலும் கூறியுள்ளார்.
2 hours ago
2 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
7 hours ago