2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

பேஸ்புக்கில் வாக்குச்சீட்டு: வேட்பாளர் சிக்கினார்

Thipaan   / 2016 மார்ச் 28 , பி.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த பொதுத்தேர்தலின் போது, தனக்கு வாக்களிக்கப்பட்ட வாக்குச்சீட்டுகளைப் படம்பிடித்து, தன்னுடைய பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்தார் என்ற குற்றச்சாட்டில், வழக்கொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவே, இவ்வாறு வழக்குத்தாக்கல் செய்துள்ளார்.

வன்னி தேர்தல் மாவட்டத்தில் கடந்த பொதுத் தேர்தலின் போது போட்டியிட்ட சிவபாலன் கஜேந்திரகுமாருக்கு வாக்களிக்கப்பட்ட யாழ்.மாவட்ட தபால் வாக்குச்சீட்டே, அவருடைய பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக, அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு வருடத்துக்குப் பின்னர் இவ்வாறு இடம்பெற்றாலும் அது தேர்தல் மோசடியாகும் என்றும் முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கொழும்பு, அளுத்கடை நீதவான் நீதிமன்றத்திலேயே இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகள் பின்னர் எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .